பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் உண்டா? இல்லையா? வெளியான தகவல்!
தமிழக அரசு 2026-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ₹248.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று (டிசம்பர் 31, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறித்து பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கான விளக்கங்கள் வெளியாகி உள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இந்த ₹248 கோடி நிதியானது பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு என சுமார் 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரொக்கப் பணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும், அரசு வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரொக்கப் பணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதித்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருப்பதால், இந்த ஆண்டு ₹2,000 முதல் ₹3,000 வரை ரொக்கப் பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ₹1,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டு பரிசாகத் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பொங்கல் போனஸை முதல்வர் இன்று அறிவித்துள்ளார்: சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள்: ₹3,000 வரை போனஸ். ஓய்வூதியதாரர்கள்: ₹1,000 பொங்கல் பரிசு.
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன்கள் நாளை ஜனவரி 2-ம் தேதி முதல் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தெரு வாரியாக, குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் ஒதுக்கி டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!