சீமான் சொன்னது நிஜம் தானா? உருட்டுக்கட்டைகளுடன் வடக்கன்ஸ்... அலறியடித்து ஓடிய மாணவிகள்!வைரலாகும் வீடியோ!
இப்படியே போனால் வடக்கில் இருந்து மெல்ல இங்கே தமிழகத்தில் குடியேறுபவர்களால் வன்முறைகளும், குற்றச் செயல்களும் அதிகரிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் ஒவ்வொரு மேடையிலும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், அவர் சொல்வது விரைவில் நிஜமாகி விடும் போல் தெரிகிறது. சமீபத்தில் தமிழக எல்லையில், சுங்கச்சாவடியில் வேலைப் பார்த்து வந்த வட இந்திய தொழிலாளர்கள், தமிழக கல்லூரி மாணவர்களை உருட்டுக் கட்டைகளால் ஓட ஓட விரட்டி அடித்தார்கள். கோவையிலும் வட இந்திய தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து தமிழர்களை அடித்தனர். இப்போது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் வேலைப் பார்த்து வந்த வட இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, கல்லூரிக்குள் உருட்டுக்கட்டைகளுடன் உலவுகிற வீடியோவும், மாணவர்களை அடிக்கிற வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் டீக்கடைகளில் துவங்கி, பானிபூரி, மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், ஸ்மார்ட் சிட்டி வேலைகள், சிக்னல்களில் கார் கண்ணாடிகளின் மீது எதிர்பாராத நேரத்தில் சோப்பு நீரைத் தெளித்து பணம் கேட்பது, சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், காய்கறி கடைகள் என அனைத்து துறைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வடமாநிலத் தொழிலாளர்களை புரோக்கர்கள் மூலம் ஒரு கும்பல் சப்ளை செய்து வருகிறது. இவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடுடன் சொற்ப சம்பளம் கிடைத்தால் போதும். இங்கேயே இருந்து விடுவார்கள் என்ற நிலை தான்.
இந்த சண்டையை அங்கு பயிலும் சக மாணவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கும் தொழிலாளாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை முற்றியதில் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் , திருப்பூர் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்மாநில தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க