undefined

"எதிரியே கிடையாதா? நான் இருப்பதே திமுகவிற்கு மறந்துவிட்டது!" - சசிகலா ஆவேசப் பேட்டி!

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.  

"எம்.ஜி.ஆர் ஏழைகளுக்காகச் சத்துணவுத் திட்டம், இலவச மின்சாரம் மற்றும் ரேஷன் அரிசி எனப் பல வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக்குப் பிறகு தான் ரேஷன் கடைகள் அரசின் நேரடிப் பார்வைக்கு வந்தன" என்று அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொங்கல் பரிசுத் தொகை வழங்காத நிலையில், இப்போது தேர்தல் வருவதால் மட்டுமே வாக்குகளைப் பெற மீண்டும் வழங்குகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் என்று அவர் விமர்சித்தார்.

"திமுக கொண்டு வந்துள்ள இந்தத் திட்டமே ஒரு சூட்சமம் கொண்டது. மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்களா என்பதை அறியவே அரசுத் திட்டத்தைப் பயன்படுத்தித் தகவல்களைச் சேகரிக்கின்றனர். மக்கள் என்ன கனவு மட்டும்தான் காண வேண்டுமா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

"கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் ஒருத்தி இருப்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்" என்று தனது அரசியல் இருப்பை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!