கொடூரத்தின் உச்சம்... போர் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டணை நிறைவேற்றம்!
ஈரானின் முக்கியப் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரித்து, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் (Mossad) வசம் ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கௌரௌஷ் கெய்வானி (Kourosh Keyvani) என்பவருக்கு இன்று (மார்ச் 18) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற 12 நாள் போரின்போது, ஈரானின் உளவுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கெய்வானி சுமார் 6 ஐரோப்பிய நாடுகளில் உளவு வேலைகளுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றதும், அதிநவீன தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் ஈரானின் முக்கிய இடங்களின் புகைப்படங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரானின் உச்ச நீதிமன்றம் அவருக்கு விதித்த மரண தண்டனையை இன்று அமல்படுத்தியது. ஈரானில் தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலிய உளவாளிக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தப் பேரிழப்பைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், உளவுப் பிரிவில் ஊடுருவியவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதன் மூலம், தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள ஈரான் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!