மரண தண்டனை சட்டம்... இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் அதிரடி முடிவு!
இஸ்ரேல் நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பிடிபடும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலியர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோருக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் இந்த மசோதா, 62 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வந்து இந்த மசோதாவிற்கு ஆதரவாகத் தனது வாக்கைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சட்டத்தின்படி, இஸ்ரேலிய ராணுவ நீதிமன்றங்களால் பயங்கரவாதிகள் என உறுதி செய்யப்படும் பாலஸ்தீனர்களுக்குத் தூக்குத் தண்டனையே முதன்மையான தண்டனையாக இருக்கும். இதற்கு முன் இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 90 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த முடிவை இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்கள் 'வரலாற்றுச் சிறப்புமிக்க நீதி' என வர்ணித்துக் கொண்டாடி வருகின்றனர்.
அதேசமயம், சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை என்றும், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன. இருப்பினும், பயங்கரவாதத்தைத் தடுக்கவும் தாக்குதல்களைக் குறைக்கவும் இந்த கடும் நடவடிக்கை அவசியம் என்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!