ஈரான் உளவுத் துறைத் தலைவர் மஜித் காதேமி படுகொலை... இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் கருஞ்சூழ் கொண்டுள்ள நிலையில், ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க அமைப்பான இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை விடியற்காலையில் தெஹ்ரான் அருகே நடத்தப்பட்ட இந்தத் துல்லியமான தாக்குதலில் காதேமி ‘வீரமரணமடைந்துள்ளதாக’ ஐஆர்ஜிசி தனது டெலிகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த போரில் முந்தைய தலைவர் முகமது காசெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு வந்த காதேமியும் தற்போது குறிவைத்துத் தூக்கப்பட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்ட இந்த உளவு அமைப்புத் தலைவரின் மரணம், ஈரான் ராணுவத்திற்கு விழுந்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் முழுவதும் இன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. தெஹ்ரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அதன் வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை ஏவி வருகிறது. பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தப் போரினால், உலக நாடுகளின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
தற்போது 45 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட 'போர் நிறுத்த வரைவுத் திட்டம்' ஒன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிலைகளில் ரகசியமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், "தற்காலிகப் போர் நிறுத்தத்தை நம்பி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க முடியாது" என்று ஈரான் பிடிவாதம் காட்டி வருவதால், போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலை உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!