போர் நிறுத்தம் காற்றில் பறந்தது... இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் 89 பேர் பலி!

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையிலும், லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் ஓயவில்லை. இன்று (ஏப். 8) இஸ்ரேல் ராணுவம் நடத்திய மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஒரே நாளில் 89 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 722 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளன. இன்றைய உயிரிழப்புகளையும் சேர்த்து, இந்த ஒரு மாத காலப் போரில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லெபனானின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாகவும், இடிபாடுகளாகவும் காட்சியளிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடிப் பொருளாதார ரீதியான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தலையிட்டு இந்தப் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!