இஸ்ரேல்  தாக்குதலில்  ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிமின் தனிச் செயலாளர் அலி யூசுப் ஹர்ஷி பலி!  

 

மேற்காசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபரான அலி யூசுப் ஹர்ஷி (Ali Yusuf Harshi) கொல்லப்பட்டார். இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளர் நயீம் காசிமின் மருமகன் மற்றும் தனிச் செயலாளர் ஆவார். ஹிஸ்புல்லா தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் மிக முக்கியப் பங்காற்றிய இவர், நயீம் காசிமின் நிழலாகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, ஆயுதக் கிடங்குகள், ஏவுதளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் என ஹிஸ்புல்லா தொடர்புடைய 10 முக்கிய இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்திருந்தாலும், அந்த ஒப்பந்தத்தில் லெபனான் நாடு சேர்க்கப்படவில்லை. இதனால் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அதே வேளையில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. லெபனானில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழலால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அமெரிக்கா-ஈரான் இடையிலான போர்நிறுத்தம் ஒருபுறம் ஆறுதல் அளித்தாலும், லெபனான் விவகாரத்தில் இன்னும் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படாதது சர்வதேச நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!