undefined

 ஐடி ஊழியர் வீட்டில் 16 பவுன் தங்கம் கொள்ளை… சகோதரர்கள் கைது!

 
 

மதுரவாயல் சொக்கநாதன் நகரில் வசித்து வரும் அந்தோனின் ஆவிஸ்மேன் (32) பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது பெற்றோர் கடந்த ஆண்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்ற நிலையில், வீடு பூட்டியே இருந்தது. இதை அறிந்த மர்ம நபர்கள் கடந்த 12-ம் தேதி நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் எடையுள்ள 14 தங்க மோதிரங்கள், 9 ஜோடி தங்க கம்மல்கள், 39 தங்க நாணயங்கள் மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை அவர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருவள்ளூர் காக்களூரை சேர்ந்த முகேஷ் (26), கண்ணன் (27) என்ற சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் இலை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வருமானம் குறைந்ததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!