undefined

சொகுசு வாழ்க்கைக்காக வீடுகளில் திருடிய  ஐடி பட்டதாரி கைது!

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த மகேஷ் ரெட்டி என்ற சன்னி (27) விசாகப்பட்டினத்தில் ஐடி மேற்படிப்பு முடித்து ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். நல்ல சம்பளம் கிடைத்தபோதும் சிறுவயதில் இருந்த திருடும் பழக்கத்தை அவர் விடவில்லை. 15 வயதில் திருட்டில் சிக்கிய அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் திருட்டில் ஈடுபட்ட மகேஷ் ரெட்டி, நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளில் புகுந்து திருட்டு நடத்தியுள்ளார். முககவசம், கையுறை அணிந்து பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்காக கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், ட்ரில்லிங் இயந்திரம் போன்ற கருவிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதுவரை சுமார் 60 வீடுகளில் திருட்டு நடத்தியுள்ளதுடன், 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 14 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த பின்னரும் அவர் திருட்டை கைவிடவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

சொகுசு வாழ்க்கை மீது அதிக ஈர்ப்பு இருந்ததால் பிஎம்டபிள்யூ கார், வெளிநாட்டு சுற்றுலா, தங்க நகைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்கள், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்ட ரூ.15.63 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஹைதராபாத், காக்கிநாடா உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் திருட்டில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!