undefined

இனி சென்னை - பெங்களூருக்கு 1 மணி நேர பயணம் தான்... அதிவேக ரயில் திட்டத்துக்கு ஒப்புதல்!

 

தென்னிந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, மத்திய பட்ஜெட் 2026-27ல் 'தெற்கு அதிவேக வைரம்' என்ற பிரம்மாண்ட ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு இடையேயான பயணத்தையே தலைகீழாக மாற்றப்போகும் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், தென்னிந்திய மாநிலங்களை இணைக்கும் அதிவேக ரயில் திட்டங்களுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ள உற்சாகமான தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களை இணைத்து ஒரு 'அதிவேக முக்கோண' வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல ரயிலில் சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஆகும் நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களில் (73 நிமிடங்கள்) சென்றடைய முடியும். இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது நகரங்களுக்கு இடையேயான தூரம் கால நேரத்தால் சுருங்கும்:

இந்த 'தெற்கு அதிவேக வைரம்' திட்டம் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. சுமார் 4,000 கிலோ மீட்டர் நீள வழித்தடங்களைக் கொண்ட இந்தத் திட்டத்தின் மூலம் ₹16 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில் போக்குவரத்து காரணமாகத் தொழில் நிறுவனங்கள், ஐடி (IT) ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் பயன் அடைவார்கள். இது தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இந்தத் திட்டம் ஜப்பானின் 'புல்லட் ரயில்' தொழில்நுட்பம் அல்லது அதற்கு இணையான அதிவேக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!