undefined

 எல்லையில் நடந்த அத்துமீறலில் பொதுமக்கள் உயிரிழந்தது வேதனைக்குரியது...ப சிதம்பரம்!

 
 


 

இந்தியா – பாகிஸ்தான் இடையே  நீடித்து வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போர் நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டு இருப்பதாக அறிவித்த சிறிது நேரத்தில் மத்திய அரசும் போர் நிறுத்த  அறிவிப்பை வெளியிட்டது. இந்த போர் நிறுத்த அறிவிப்பால் எல்லையில் கடந்த 4 நாட்களாக நிலவி வந்த பதற்றம்  தணிந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் ,  ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய எல்லையோர மாநிலங்களிலும் பதற்றம் குறைந்துள்ளது. சண்டை நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டதையடுத்து அமலுக்கு வந்துள்ளது. எனினும் பாகிஸ்தான் எல்லையில் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபடலாம் என்பதால் பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில்  மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரமும் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சியில்  ப.சிதம்பரம் கூறியதாக  
பெரிய அளவிலான போரின் ஆபத்தை பிரதமர் மோடி உணர்ந்து, இலக்குகளை தேர்வு செய்து மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை என்ற புத்திசாலித்தனமான முடிவை எடுத்து இருக்கிறார். இந்திய ராணுவம் ஏவுகணைகளையும் டிரோன்களையும் 9 இடங்களில் ஏவியுள்ளது. பாகிஸ்தானில் 4 இடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் என 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கபட்டுள்ளன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ராணுவ சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் நியாயமான பதிலாக இது அமைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ பாஸ்கள் இதற்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்க மாட்டார்கள் எனக்கருதுவது அப்பாவித்தமனாதாக இருந்து இருக்கும்.

அதேபோல, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) மற்றும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய பயங்கராவத இயக்கங்களின் தளங்களும் 7 ம் தேதி கொடுத்த பதிலடியில் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு இருக்கும் என கருதுவதும் முதிர்ச்சியற்றதாக இருக்கும். சில தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் அவர்களின் லீடர்ஷிப் என்பது அப்படியே தான் இருக்கும். கொல்லப்பட்ட தலைவர்களின் இடத்திற்கு புதியவர்கள் வந்துவிடும் திறன் உள்ளது என்பதை கடந்த காலங்களில் நிரூபித்து இருக்கிறார்கள். ஆர்வமாக உள்ள இளைஞர்களை தேர்வு செய்து இந்தியாவுக்கு எதிராக செயல்களில் ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். அவர்களின் உயிரை கூட தியாகம் செய்ய வைக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ராணுவ தலைவர்களும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் வரை இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல் ஓய்ந்துவிடாது. ராணுவ மோதல்கள் ஏற்பட்டால் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் இருபக்கமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். ஒருபக்கம்தான் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லையில் நடந்த அத்துமீறலில் பொதுமக்கள் உயிரிழந்தது வேதனைக்குரியது. ஆனால் சில உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதது. போர் என்பது இரக்கமற்றது எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது