undefined

"உசுரைப் பணயம் வைத்து பள்ளிக்கு பயணம்..” - சீர்காழியில் மாணவர்களின் அவல நிலை!

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பள்ளி மாணவர்கள் நேரத்தைச் மிச்சப்படுத்துவதற்காக ஆற்றில் அமைக்கப்பட்ட பலவீனமான மூங்கில் பாலத்தின் வழியே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தாம்பட்டினம் மற்றும் கோணயாம்பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு இடையே முல்லையாறு ஓடுகிறது. இப்பகுதியில் உள்ள மாத்தாம்பட்டினம் கிராமத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோணயாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். வழக்கமான சாலை வழியாகச் சென்றால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் ஆற்றின் குறுக்கே உள்ள தற்காலிக மூங்கில் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மூங்கில் பாலம் தற்போது முழுமையாகச் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. வேறு வழியின்றி, பெற்றோர்களின் உதவியுடன் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணையம் வைத்து இந்த ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான நிரந்தரக் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துச் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி விரைவில் அங்குத் தற்காலிக நடைபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், "மாணவர்கள் செல்லும் இந்த மூங்கில் பாலம் வழக்கமான பாதை அல்ல; அது ஒரு குறுக்கு வழி. அந்த கிராமத்திலிருந்து மொத்தம் 23 மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அதில் 5 மாணவர்கள் மட்டுமே இந்த ஆபத்தான குறுக்கு வழியைப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால், இந்த ஆபத்தான பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இப்பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும்" என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த உடனடிப் பதில், அப்பகுதி மக்களிடையே ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!