undefined

"இது டிரெய்லர் தான்.. திருச்சியில் மெயின் பிக்சர்"..  1,50,000 பூத் ஏஜென்ட்கள் மத்தியில் ஸ்டாலின் கர்ஜனை!

 

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக நடத்தி வரும் மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் முகவர்கள் கலந்து கொண்டனர்.

"இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது வெறும் டிரெய்லர் தான். வரும் மார்ச் 9-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில்தான் 'மெயின் பிக்சர்' காட்டப்படும்" என சினிமா பாணியில் முதல்வர் பேசியது தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

வரும் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதே லட்சியம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக 350 வாக்குகளைப் பெற முகவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அடுத்த 3 மாதங்களில் மொத்தம் 15 பெரிய மாநாடுகளை நடத்தி, 20 லட்சம் மக்களை நேரடியாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "மக்களே எஜமானர்கள்; அவர்களிடம் அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைச் சேகரியுங்கள்" என முகவர்களுக்கு உத்தரவிட்டார்.

மத்திய அமைப்புகளின் சோதனைகளைக் கண்டு திமுக அஞ்சாது என்று கூறிய முதல்வர், "மிசா, தடா காலங்களையே பார்த்த இயக்கம் இது; பாஜக-வின் மிரட்டல்களுக்குப் பணிய நான் ஒன்றும் எடப்பாடி பழனிசாமி அல்ல" என்று காட்டமாக விமர்சித்தார்.

தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியைச் சாடிய அவர், வரும் தேர்தல் 'தமிழ்நாடு vs டெல்லி ' இடையிலான மோதல் என்று வர்ணித்தார். இந்த மாநாட்டின் போது, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் கீழடி ஆய்வறிக்கை தாமதம் குறித்துப் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!