"சாப்பாட்டுல மட்டும்தான் கூட்டு, பொரியல்.. அரசியல்ல கூட்டணி கிடையாது..” - 234 தொகுதியிலும் இளைஞர்களே போட்டி - சீமான் அதிரடி!
திருச்சியில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில கலந்தாய்வு கூட்டத்தில், சீமான் தனது வழக்கமான பாணியில் அனல் பறக்கப் பேசியுள்ளார். பெண்களுக்கு விடுதலை என்பது போராடிப் பெற வேண்டிய ஒன்று என்றும், அதற்கான உண்மையான களம் அரசியல்தான் என்றும் குறிப்பிட்ட அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 117 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி சரிபாதி அரசியல் புரட்சியைத் தொடரப் போவதாக அறிவித்தார்.
வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சீமான், களத்தில் இருக்கும் ஜாதி மற்றும் சமூகச் சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். பெரும்பான்மை சமூகம் மட்டுமன்றி, இதுவரை புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அவர் விளக்கமளித்தார். "ஜாதி, மதம் பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; ஜாதியாக நின்று இங்கு யாரும் வென்றதில்லை. எல்லா சமூகமும் என்று இணைகிறதோ, அன்றுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்" என்று அவர் முழங்கினார்.
கூட்டணி குறித்துப் பேசிய சீமான், தேர்தல் களத்தில் தமக்கு எந்தச் சமரசமும் கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். "தேர்தல் கூட்டணி எல்லாம் கிடையாது; சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொரியல் எல்லாம் இருக்கும். சண்டை என்று வந்துவிட்டால் அது தனித்துப் போர் செய்வதுதான்!" என்று அவர் நக்கலாகக் கூறியபோது தொண்டர்களிடையே பலத்த கைதட்டல் எழுந்தது.
முக்கிய அறிவிப்பாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் 234 வேட்பாளர்களையும், வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அந்த 234 வேட்பாளர்களும் இளைஞர்களாகவே இருப்பார்கள் என்பதுதான் இதில் ஹைலைட்! "மக்கள் நம் அரசியலைப் புரிந்துகொள்ளும்போது நம்மைக் கொண்டாடுவார்கள், விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள்" என்று தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்து தனது உரையை முடித்தார் சீமான்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!