"டபுள் என்ஜின் அல்ல... அது டப்பா என்ஜின்" - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடும் பதிலடி!
டெல்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு ஒருபோதும் தலைகுனியாது" என்று முழங்கியுள்ள முதலமைச்சர், வளர்ச்சியில் பாஜக ஆளும் மாநிலங்களைவிடத் தென்னிந்திய மாநிலங்களே சிறந்து விளங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "தமிழகத்தில் பாஜக - என்டிஏ தலைமையிலான டபுள் என்ஜின் அரசு அமைந்தால், மாநிலத்தை ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவோம்" என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் கடுமையாக விமர்சித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"பிரதமர் சொல்லும் 'டபுள் என்ஜின்' என்பது உண்மையில் ஒரு 'டப்பா என்ஜின்'. அது தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது" என்று அவர் விமர்சித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அதையெல்லாம் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு இன்று வரலாற்றில் இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"டபுள் என்ஜின்" அரசு நடப்பதாகச் சொல்லப்படும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரை விட, பாஜக ஆட்சி செய்யாத தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களே வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கின்றன என்று அவர் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளார்.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாஜக செய்த துரோகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், இதற்காக #NDABetraysTN என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!