"புதிய கட்சி அல்ல; சட்டப் போராட்டம்; எடப்பாடி தலைமையில் திமுகவை வெல்ல முடியாது" - ஓபிஎஸ் பேட்டி!
அதிமுகவின் சட்ட விதிகளைக் காப்பாற்றவும், தொண்டர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் தான் தொடர்ந்து போராடி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
"எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளர் பதவி தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அந்த விதியில் திருத்தம் செய்து, 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என மாற்றியுள்ளனர். இது தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்" என ஓபிஎஸ் சாடினார். தான் புதிய கட்சி எதையும் தொடங்கப் போவதில்லை என்றும், அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் தன் பக்கமே இருப்பதாகவும் அவர் கூறினார். "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு" மூலமாகவே தனது பணிகளைத் தொடரப் போவதாக அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவால் ஒருபோதும் திமுகவை வெற்றி பெற முடியாது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தான் சந்தித்துள்ளது" என விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் சில தினங்களில் முறைப்படி அறிவிப்பேன் என்று கூறினார். மேலும், பிரதமர் மோடியின் கூட்டத்திற்கான அழைப்பு தனக்கு இன்னும் வரவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!