"நான் 8 போர்களை முடிச்சு வெச்சிருக்கேன்!" - நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட டிரம்ப் பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெளியுறவுக் கொள்கைகள் மூலம் உலகளாவிய மோதல்களைத் தவிர்த்துள்ளதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை நியாயப்படுத்தியுள்ளார். இது சர்வதேச அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்தபோது அவருக்குப் பரிசாக வழங்கினார். வேறொருவருக்கு வழங்கப்பட்ட உயரிய விருதை டிரம்ப் பெற்றுக்கொண்டது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மச்சாடோ ஒரு அற்புதமான பெண்மணி என்று பாராட்டிய டிரம்ப், "நீங்கள் 8 போர்களை நிறுத்தியிருக்கிறீர்கள், எனவே இந்தப் பரிசு உங்களை விட வேறு யாருக்கும் பொருத்தமாக இருக்காது என மச்சாடோ என்னிடம் கூறினார். அதனால்தான் அதை ஏற்றுக் கொண்டேன்" என்றார்.
தனது உரையில் வழக்கம் போல இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தைக் குறிப்பிட்ட டிரம்ப், "இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஏற்படவிருந்த பெரும் போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன்" எனத் தனது சாதனையாகப் பட்டியலிட்டார்.
உலக அமைதிக்காகத் தான் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தனது பெயரை நோபல் பரிசுக்கு அதிகாரப்பூர்வமாக முன்மொழிய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!