மூஞ்சி முகரைய உடைப்பேன் என டிடிஎப் வாசன் ஆவேசம்.. பதுங்கும் ஐயப்பன் ராமசாமி- வீடியோ !!

 

கோவை சேர்ந்த டிடிஎப் வாசன் என்பவர், தனது விலையுயர்ந்த பைக்கில் வேகமாக சென்று அதை வீடியோவாக வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். Twin Throttlers என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். 

இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பைக் பின்னாள் உட்காரவைத்து அவரை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி அந்த வீடியோவை வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிடிஎப் வாசன் மீது கோவை போத்தனூர், சூலூர் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான டிடிஎப் வாசன், கோர்டு சூட்டுடன் காரில் வந்தார். அப்போது அவர் நடந்துசென்றதை கேஜிஎப் வசனம், பிஜிஎம் எடிட் செய்து அந்த வீடியோ வெளியிட்டார். இதுவும் சர்ச்சையானது.

இதனிடையே சமீபத்தில் வெளியான வீடியோவில் ஐயப்பன் ராமசாமி, எனக்கு ட்விட்டர் விட இன்ஸ்ட்டாகிராமில் தான் டீனேஜ் பெண்கள் பாலோவர்ஸ் அதிகமாக உள்ளனர். அதனால்தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை அட்மினிடம் கொடுக்காமல் நானே பார்த்து வருகிறேன். அட்மினிடம் கொடுத்துவிட்டால் அவனே மொத்தத்தையும் சாப்ட்ருவான் என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. 

இதனை பயன்படுத்திக்கொண்ட டிடிஎப் வாசன், ஐயப்பன் ராமசாமியின் பெண்கள் குறித்தான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 
அதில், கேவலம் பணத்துக்காக ஒருத்தரை பற்றி இழிவு படுத்தும் ஐயப்பன் ராமசாமிக்கு இனி மரியாதையே கிடையாது. வயசுக்கு கொடுக்கும் மரியாதையை அவர் இழந்து விட்டார். அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண்களையே சாப்ட்ருவாங்க என்று கேவலமாக பேசியுள்ளார். ஆனால் எந்த பெமினிசம் பேசும் ஒரு பெண் கூட அவருக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. 

இதே வார்த்தையை நான் சொல்லி இருந்தால் உடனே வந்திருப்பார்கள். இந்த மாதிரியான ஆட்களை விட்டுவிட்டு சின்ன சின்ன விதி மீறல்களுக்கு எல்லாம் என்னை போன்ற ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒருத்தன் அமுல் பேபி போல இருந்தால் உடனே அவனை பாலோவ் செய்யாதீர்கள்.

ஒருத்தருடைய உழைப்பை பார்த்து அவரை பாலோவ் செய்தால் அது உதவியாக இருக்கும். ஐயப்பன் ராமசாமியோட இன்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுகொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன். கையில் சிக்கினா மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளோ வெறியில இருக்கேன், என்று ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!