ஜாக்பாட்... ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு.. அரசு வேலையும் கன்பார்ம்.. கர்நாடக முதல்வர் அறிவிப்பு!
விளையாட்டு வீரர்களே ரெடியாகிக்கொள்ளுங்கள்! 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக இப்போதே அதிரடித் திட்டத்தைத் தீட்டியுள்ளது கர்நாடக அரசு. பெங்களூரு விதான் சவுதாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களை வாயடைக்க வைக்கும் வகையிலான மெகா பரிசுத் தொகையை அறிவித்து அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக் மேடையில் ஏறி தங்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்குப் பரிசாகச் சுமார் 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 4 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும் பரிசாகக் காத்திருக்கிறது. வெறும் பணத்தோடு மட்டும் நிறுத்திவிடாமல், பதக்கம் வெல்லும் வீரர்களுக்குக் கௌரவமான அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்து வீரர்களின் எதிர்காலத்திற்குப் பெரிய உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார் சித்தராமையா.
வீரர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், காவல்துறை மற்றும் வனத்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடும், மற்ற அரசுத் துறைகளில் 2 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பிறப்பிக்கப்படும் என்ற அதிரடித் தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
கர்நாடக வீரர்கள் ஒலிம்பிக் மேடையில் சாதிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், அதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 60 வீரர்களுக்கு ஆண்டுதோறும் தலா 10 லட்சம் ரூபாய் பயிற்சி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கேரளாவைப் போலவே கர்நாடகாவும் விளையாட்டுத் துறையில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவர் ஆவேசமாக முழங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ள இந்த அறிவிப்பு இப்போது இந்திய விளையாட்டு உலகில் பேசுபொருளாகியுள்ளது!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!