undefined

சேலத்தில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு... 2 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏற்பட்ட விபத்துகளால் இரண்டு குடும்பங்கள் தங்களது உறவுகளை இழந்துள்ளன.

கொண்டையம்பள்ளியில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெகதீஷின் மனைவி வினிதா (31) தனது கைக்குழந்தையுடன் வேடிக்கை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகச் சீறி வந்த மாடு வினிதாவை முட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நல்லவேளையாகக் கைக்குழந்தை காயமின்றி உயிர் தப்பியது.

அதேபோல் செந்தாரப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கச் சென்ற சின்னத்தம்பி என்பவரின் மகன் சக்திவேல் (26), காளை முட்டியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த இரு இடங்களிலும் நடந்த மோதல்கள் மற்றும் மாடு முட்டியதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, உலிபுரம் மற்றும் நாகம்பட்டி ஆகிய ஊர்களில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாகத் தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறிப் போட்டிகளை ஏற்பாடு செய்தவர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!