undefined

ஜல்லிக்கட்டு விதிமுறைகளில்   புதிய தளர்வுகள்!  

 

தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை குறைக்கும் வகையில் விதிமுறைகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்” தற்போது பெருமையுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற போட்டியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கி சிறப்பாக விளங்கும் வீரர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போட்டி நடத்தும்போது ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு தற்போது சில விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆன்லைன் பதிவு முறைக்கு பதிலாக மாவட்ட அளவில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இதுவரை முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழி நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து, இந்த விளையாட்டை தொடர்ந்து ஊக்குவிக்க அரசு உறுதியாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!