undefined

“தேசத்தை நேசிக்கலாம்… வழிபட கட்டாயமில்லை”... வந்தே மாதரம் குறித்து ஜமியத் இ உலாமா ஹிந்த் தலைவர் ! 

 
 

நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் தொடர்பாக சிறப்பு விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வந்தே மாதரம் பாடுவதற்கு எதிர்ப்பில்லை என்றும், ஆனால் அதன் பொருளில் உள்ள வழிபாட்டு அம்சங்கள் முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு எதிரானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அல்லாவைத் தவிர வேறு யாரையும் வழிபட முடியாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படை எனக்   குறிப்பிட்டார்.

வந்தே மாதரம் என்ற சொல்லுக்கு “அம்மா, நான் உன்னை வணங்குகிறேன்” என்பதே பொருள் எனவும், அதன் சில வரிகளில் நாடு தெய்வமாக்கப்பட்டு துர்கா தேவியுடன் ஒப்பிடப்படுவதாகவும் அவர் கூறினார். இது ஷிர்க் என்ற பாவ நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாக விளக்கினார். மத நம்பிக்கைக்கு எதிரான கோஷங்களையோ பாடல்களையோ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

அரசியலமைப்பு வழங்கிய மதச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நினைவுபடுத்திய அவர், நாட்டை நேசிப்பதுக்கும் வணங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றார். முஸ்லிம்களுக்கு தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை என்றும், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்தார். ஒரே கடவுளை நம்பும் தங்கள் வழியில் யாருக்கும் முன்னால் சிரம் பணிய முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!