‘ஜனநாயகன்’ டிக்கெட் முன்பதிவில் சாதனை... ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
அரசியல் பயணத்திற்கு முன் விஜய் நடிக்கும் கடைசி படம் எனக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள நிலையில், அனிருத் இசை ரசிகர்களை ஏற்கனவே கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டு முன்பதிவில் படம் புதிய சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் தொடங்கிய முன்பதிவில் 12,700 டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன. மேலும், வரும் 27-ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு ‘ஜனநாயகன்’ உண்மையிலேயே திருவிழா தான்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!