ஜனநாயகன் பேனர் அகற்றம்… சிறுவர்களை ஏறவைத்ததாக பரபரப்பு!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வருகிற 9-ம் தேதி வெளியாகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் திரையரங்கில், காலை 9 மணி காட்சியை ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இலவசமாக திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு, திரையரங்கின் அருகே தனியார் இடத்தில், உரிய அனுமதி பெற்று 60 அடி உயர விஜய் பேனர் வைக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி இல்லை எனக் கூறி, சாத்தான்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பேனரை அகற்றினர். கயிறு மூலம் பேனரை கீழே இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணியின் போது, தீயணைப்பு துறையினர் மேலே ஏறாமல், இரண்டு சிறுவர்களை 60 அடி உயர கம்பத்தில் ஏற வைத்து பேனரை அகற்றச் செய்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு இல்லாத இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!