பொங்கல் ரேஸில் சிக்கல்… பராசக்தி, ஜனநாயகன் படங்களுக்கு தடை?
2026 புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், ஜனநாயகன் படம் இன்று வெளியாக வேண்டிய நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். படத்திற்கு எதிரான புகார்கள் ஆபத்தானவை என்றும், அவற்றை ஊக்குவிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக சில நிமிடங்களிலேயே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், உடனடி சான்றிதழ் கிடைக்காது என கூறப்படுகிறது.
இதே நேரத்தில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘பராசக்தி’ படத்திற்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்தி எதிர்ப்பை மையமாக கொண்ட இந்த படத்தில் 15 காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், பராசக்தியும் வெளியாகவில்லை என்றால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக முடியும் என்ற பேச்சு பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!