undefined

‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம்... இன்று  கோர்ட்டில் முக்கிய விசாரணை! 

 

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஆனால் அந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை என கூறிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டையே அணுகுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு  இன்று  காலை 11.30 மணிக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!