undefined

 ‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கு  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு! 

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க தாமதித்ததால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

விசாரணையில் தணிக்கை வாரியம் தரப்பில், “திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். அதற்கு மேலும் 20 நாட்கள் அவகாசம் தேவை. அதன் பின்னரும் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு தொடராமல் இருந்திருந்தால் படம் இதற்குள் வெளியாகியிருக்கும்” என வாதிடப்பட்டது.

இதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “மறுதணிக்கை குறித்து எங்களை முறையாக தொடர்புகொள்ளவில்லை. டிசம்பர் 29க்குப் பிறகு தகவல்கள் மறைக்கப்பட்டன. வெளிப்படைத்தன்மை இல்லாத நடவடிக்கையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இதனால் ‘ஜன நாயகன்’ வெளியீடு மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!