‘ஜன நாயகன்’ தணிக்கை சான்று வழக்கு:... உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!
‘ஜன நாயகன்’ பட தணிக்கை சான்று விவகாரத்தில், ஜனவரி 27 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடந்தது. இதில், தனி நீதிபதி பிறப்பித்த “உடனடி ‘U/A’ சான்றிதழ் வழங்க வேண்டும்” என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தணிக்கை வாரியம் தனது தரப்பை விளக்கக் கூறும் வாய்ப்பை பெறவில்லை என்று தெரிவித்து வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பி வைத்தது.
இதனிடையே, தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்வின் போது, அவர்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தணிக்கை வாரியம் வலியுறுத்தியுள்ளது.
தனி நீதிபதி மீண்டும் விசாரணை செய்து இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது. இதற்கிடையில், தயாரிப்பு நிறுவனம் சட்டப் போராட்டத்திற்கு பதிலாக, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!