‘ஜனநாயகன்’ பட தணிக்கை விவகாரம்… வழக்கை வாபஸ் பெற்ற படக்குழு!
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கோரி தொடரப்பட்ட வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. தணிக்கை குழு படம் மறுதணிக்கைக்கு அனுப்பிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. பின்னர் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் படம் மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்ததால் வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான கடிதத்தை தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வழங்கினார். சென்சார் வாரியத்தின் மறு ஆய்வு குழு 20 நாட்களில் படம் பார்த்து தேவையான திருத்தங்களை கூறிய பின் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!