‘ஜனநாயகன்’ வெளியீடு எப்போது? எகிறும் எதிர்பார்ப்பு!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் முதலில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். விஜய்யின் அரசியல் பயணத்தை நினைவூட்டும் வகையில் ‘ஜனநாயகன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. பல நாடுகளில் இருந்து விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் காணொளிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதற்கிடையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் கனடாவில் இந்த படத்தை வெளியிடும் யோர்க் சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ஒரு தகவலை பகிர்ந்தது. அதில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்பு அங்கு வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை பற்றிய தகவல்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!