சென்சார் சிக்கலில் விஜய் ‘ஜனநாயகன்’… ஓடிடி ஒப்பந்தத்திலும் குழப்பம்!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் மமிதா பைஜு நடித்துள்ள நிலையில் நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ‘அனிமல்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாபி டியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் படம் இன்னும் வெளியாகாததற்கு முக்கிய காரணம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததே என கூறப்படுகிறது.
படத்தை மறுதணிக்கை செய்ய சில நாட்களுக்கு முன்பு சென்சார் குழுவிற்கு திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் குழு உறுப்பினரின் உடல்நலக் குறைவு காரணமாக அந்த திரையிடல் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்கனவே தாமதமாகி வரும் படத்தின் வெளியீடு மேலும் பின்னுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் சுமார் ரூ.120 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் படத்திற்கு இன்னும் வெளியீட்டு தேதி நிர்ணயிக்கப்படாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் எண்ணத்தில் நிறுவனம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!