‘ஜனநாயகன்’ படத்தின் கதை இது தான்... போட்டு உடைத்த பிக்பாஸ் பிரபலம் பிரஜின் !
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மையக் கருத்து குழந்தைகளுக்கு ‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம் பிரஜின் தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்த பின் பேசிய அவர், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக இப்படம் வலுவான குரல் கொடுக்கிறது என்று பாராட்டினார். சமூகத்தில் மறைக்கப்படும் உண்மைகளை தைரியமாக பேசும் படம் இது என்றார்.
பெண்களுக்கு எல்லா இடங்களிலும் தவறுகள் நடந்து வருவதாக கூறிய பிரஜின், பெண்கள் இதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தவறான தொடுதல் பற்றி பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும் என்றும், இதை மறைப்பது தவறான அணுகுமுறை என்றும் கூறினார். விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய சம்பவங்கள் தொடர காரணம் என்றார்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான பிரஜின், இப்படத்தின் சமூகப் பொறுப்பை சுட்டிக்காட்டினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார். ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படம் சமூக ரீதியாகவும் கவனம் பெறும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!