undefined

ஜனவரி 23ல் தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்.. தவெக செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியின் தலைவர் விஜய்யின் அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் எதிர்காலக் கூட்டணி குறித்த அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஒரு திரைப்படத்திற்கு ₹250 கோடி வரை ஊதியம் பெறும் நிலையில், சுமார் ₹1000 கோடிக்கும் மேலான வருமானத்தை மக்கள் பணிக்காகத் துறந்துவிட்டு அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய் மட்டுமே எனச் செங்கோட்டையன் புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில மக்கள் கூட விஜய்யைப் போன்ற ஒரு தலைவர் தங்கள் மாநிலத்திற்கு இல்லையே என ஏங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

விஜய் பொருளாதாரத்தில் சிறந்த ஆளுமை கொண்டவர் என்றும், அவர் அளிக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் உறுதி அளித்தார். தவெக-வில் வேட்பாளர்களைத் தேட வேண்டிய அவசியமில்லை; படித்த இளைஞர்கள் மற்றும் திறமையானவர்கள் கட்சியில் அதிகளவில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்றும், அவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். செங்கோட்டையனின் பேச்சில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம், ஜனவரி 23-ஆம் தேதி குறித்த அவரது அறிவிப்புதான்.

வரும் ஜனவரி 23ம் தேதிக்குப் பிறகு, தவெக-வுடன் எந்தெந்தக் கட்சிகள் கைகோர்க்கப் போகின்றன என்பது தெளிவாகத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுவாரசியமான விஷயமாக, அதே ஜனவரி 23-ஆம் தேதிதான் டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது இறுதி வடிவத்தைப் பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தற்செயலான ஒற்றுமை, தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!