ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறலாம்... சீனா பகிரங்க எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டிடம் தற்போது சுமார் 44.4 டன் புளூட்டோனியம் இருப்பு வைக்கப்பட்டுள்ள விவகாரம், அண்டை நாடான சீனாவிற்குத் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளது. "நினைத்த மாத்திரத்தில் ஜப்பான் ஒரு அணு ஆயுத நாடாக மாறிவிடும்" என்று சீனா தற்போது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது. ஜப்பான் தனது பழைய அமைதிக் கொள்கைகளைக் காற்றிலே பறக்கவிட்டுவிட்டு, ராணுவ பலத்தைப் பெருக்கி வருவதாகச் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு ஜப்பான் காட்டும் நெருக்கமும், தைவான் விவகாரத்தில் அவர்கள் எடுக்கும் அதிரடி நிலைப்பாடும் ஆசியப் பிராந்தியத்தில் அமைதியைக் குலைப்பதாகச் சீனா சாடியுள்ளது. "அணு ஆயுதம் இல்லை என்கிற கொள்கையெல்லாம் வெறும் பேச்சுதான், உண்மையில் ஜப்பான் ஆபத்தான பாதையில் பயணிக்கிறது" என்பதுதான் சீனாவின் தற்போதைய வாதம். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருக்கும் கசப்புணர்வை மீண்டும் ஒருமுறை உலகரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஏற்கனவே கடல் எல்லை விவகாரங்களில் மோதிக்கொள்ளும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே, இப்போது 'அணு ஆயுத' விவகாரம் புகுந்துள்ளதால் ஆசியப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஜப்பான் உண்மையிலேயே அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிடுகிறதா அல்லது சீனா தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறதா என்பது விவாதப் பொருளாகியுள்ளது. என்னதான் இருந்தாலும், இந்த வல்லரசு நாடுகளின் வார்த்தைப் போர் மற்ற நாடுகளையும் ஒருவிதப் பதற்றத்திலேயே வைத்திருக்கப் போகிறது என்பது மட்டும் நிதர்சனம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!