undefined

ஜப்பான் தேர்தலில் வெற்றி... பிரதமர் சானே தகைச்சிக்கு ட்ரம்ப் பாராட்டு!

 

ஜப்பானில் நேற்று நடைபெற்ற தேர்தலில் சானே தகைச்சியின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சானே தகைச்சியின் வெற்றியைப் பாராட்டியுள்ளார்: "மிகவும் முக்கியமான இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள பிரதமர் சானே தகைச்சி மற்றும் அவரது கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள். தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர் எடுத்த துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுக்குப் பெரிய பலன் கிடைத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க 'சூப்பர் மெஜாரிட்டி' பலத்தை அவரது கட்சி பெற்றுள்ளது. தகைச்சி ஒரு மதிக்கத்தக்க மற்றும் மிகவும் பிரபலமான தலைவர். அவருக்குத் தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவு அளித்தது எனக்குக் கிடைத்த பெருமை. ஜப்பானின் அற்புதமான மக்களுக்கு எனது வலுவான ஆதரவு என்றும் உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ராணுவ வலிமையை அதிகரிக்கவும், பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் சானே தகைச்சி முன்வைத்துள்ள "Conservative, Peace Through Strength Agenda" என்ற கொள்கை சிறப்பாகச் செயல்பட டிரம்ப் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே, சானே தகைச்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த டிரம்ப், அவரை வெள்ளை மாளிகைக்கு வரும் மார்ச் 19-ஆம் தேதி அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சானே தகைச்சி பிரதமரான பிறகு அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக அமையும்.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்த டிரம்ப், தற்போது அவரது சீடரான சானே தகைச்சியுடனும் அதே போன்ற வலுவான உறவைப் பேண விரும்புவதை இந்த வாழ்த்துச் செய்தி காட்டுகிறது. குறிப்பாகச் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!