விமான எரிபொருள் விலை கிடுகிடு உயர்வு!

 

மத்திய ஆசியப் பகுதிகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அமைதியற்ற சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவில் பெரும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக, இந்தியாவில் ஏப். 1 முதல் விமான எரிபொருளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை 2.07 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது, விமான நிறுவனங்கள் மற்றும் அடிக்கடி பயணம் செய்யும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, கடந்த சில நாட்களாகவே எரிபொருள் விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது. தற்போதைய இந்த அதிரடி விலையேற்றத்தால், விமானங்களை இயக்குவதற்கான செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருளுக்கே செலவிட வேண்டிய கட்டாயம் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணக் கட்டணங்களை வரும் நாட்களில் கணிசமாக உயர்த்த அந்தந்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

ஏற்கனவே கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலையேற்றம் பயணிகளின் திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் விமான எரிபொருள் விலை 2.10 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது, நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. அவசரத் தேவைகளுக்காகவும், தொழில் நிமித்தமாகவும் விமானப் பயணங்களை மேற்கொள்பவர்கள், இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், அலைபேசி வழி முன்பதிவுகளில் இப்போதே கட்டண உயர்வு பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!