இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதல்… 4 சிறுவர்கள் பலி!

 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து சிரையாதண்ட் பகுதியில் உள்ள பிபர்வர்–தண்ட்வா சாலையில் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பராதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அப்போது கார் பச்ரா பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்ததாக பிபர்வார் காவல் நிலைய அதிகாரி அபய் குமார் கூறினார். சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!