ரகசிய வீடியோ சர்ச்சை... பெரு இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெரி பதவி நீக்கம்!
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை ரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெரி நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக 75 வாக்குகளும், ஆதரவாக 24 வாக்குகளும் பதிவானது.
கடந்த அக்டோபரில் ஊழல் புகாரால் முன்னாள் அதிபர் தினா போலுவார்டே நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தலைவராக இருந்த ஜோஸ் ஜெரி அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் பதவியேற்ற நான்கே மாதங்களில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. இரவு நேர சந்திப்பு தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தலைவர் ஃபெர்னாண்டோ ரோஸ்பிக்லியோசி இடைக்கால அதிபர் பதவியை ஏற்க மறுத்துள்ளார். இதனால் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், அவரே இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இது பெருவில் நடந்த எட்டாவது ஆட்சி மாற்றமாகும். இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீத வளர்ச்சியில் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!