லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 வருட சிறை... நீதிமன்றம் தீர்ப்பு!
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருநெல்வேலி மகாராஜா நகரை சேர்ந்த சிவபாரதி என்பவர் 30.04.2010 அன்று, தனது கலவை மிஷின் நிறுவனத்திற்கு மின்சார இணைப்பு கேட்டு வல்லநாடு, TNEB விநியோகம், ஜூனியர் பொறியாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்தார். மனுவை இளநிலை பொறியாளர் திருப்பதி பெற்று கோரிக்கைப் பதிவேட்டில் சேர்த்தார்.
சிவபாரதி அலுவலகத்தில் சிவபாரதியிடம் சந்தித்தபோது, கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த இளநிலை பொறியாளர் திருப்பதி 35ஆயிரம் லஞ்சம் ஆயிரம் கேட்டார். சிவபாரதி இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக செலுத்த முடியாது என்பதால், 10.05.2010 மாலைக்குள் முன்பணமாக ரூ10,000 செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
பத்தாயிரம் லஞ்சம் கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வசித்குமார் இன்று தீர்ப்பு அளித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!