இன்று பூமியை நெருங்கும் பிரம்மாண்ட வியாழன்… வானில் வெறும் கண்களால் பார்க்கலாம்!
நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக வியாழன் உள்ளது. இதுவே சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோள். சுமார் 1,300 பூமிகளை வியாழனுக்குள் அடக்கலாம் என்பதே அதன் பெருமை. 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் இதனை சுற்றி வருகின்றன.
பூமி மற்றும் வியாழன் இடையிலான தொலைவு சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர். இந்த பிரம்மாண்ட கோளின் நகர்வை நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வில், வியாழன் பூமிக்கு அருகில் வரவிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் இன்று வியாழன் கோளை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில், ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கு அருகில் இந்த கோள் தெளிவாக தெரியும். நாளை சூரியன், பூமி, வியாழன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் காணப்படுவது வானில் அரிய காட்சியாக இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!