கல்யாணமாகி 12 நாள் தான்... இளம் தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை!
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே, திருமணமான 12 நாட்களிலேயே 30 வயது இளம் தொழிலதிபர் சுதீப் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்த மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. நெல்யாடியைச் சேர்ந்த சுதீப், மங்களூரைச் சேர்ந்த சவுமியா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த மகிழ்ச்சி இரண்டு வாரங்கள் கூட நீடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலால், மனமுடைந்த சுதீப் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சுதீப்பின் தந்தை தாமோதர் அளித்த புகாரின் பேரில், மனைவி சவுமியா மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சவுமியா குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. "சவுமியா என்னை ஏமாற்ற முயன்றார், நல்வாய்ப்பாக நான் தப்பித்தேன்" என்று வேணு ஷெட்டி என்ற இளைஞர் ஒருவரும் புகாரளிக்க முன்வந்தது வழக்கை மேலும் சூடாக்கியுள்ளது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சவுமியா, "எனது கடந்தகாலம் குறித்து சுதீப்பிற்கு முன்பே தெரியும், அவரது குடும்பத்தினர் எங்களை ஏற்காததே இந்தத் தற்கொலைக்குக் காரணம்" என்று ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். "காதலித்துக் கைபிடித்த கணவன், 12 நாட்களிலேயே ஏன் இந்த முடிவை எடுத்தார்?" என்பதுதான் இப்போது மர்மமாக நீடிக்கிறது. திருமணத்திற்காக ஆசை காட்டிப் பணத்தைப் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரா சவுமியா அல்லது குடும்பப் பிரச்சினையா எனப் போலீசார் பல்வேறு கோணங்களில் அலசி வருகின்றனர். இந்த 'திருமண மர்மம்' கர்நாடகா முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!