undefined

#JUST IN: பட்டாசு கிடங்கு வெடித்துச் சிதறியதில் 3 பேர் பலி... கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து!

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பட்டாசு கிடங்கில் இன்று நண்பகல் வேளையில் இந்த பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. கல்லாவி பகுதியில் வசிப்பவருக்குச் சொந்தமான அந்தப் பட்டாசு கிடங்கில், தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. அடுத்த சில விநாடிகளில் கிடங்கில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின:

வெடிப்பின் வீரியத்தால் அந்தக் கிடங்கு கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் இந்த அதிர்வால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் சிதறி பலியாகினர். பலியானவர்கள் அங்கிருந்த தொழிலாளர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மேலும் 4 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்தவுடன் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய மோப்ப நாய் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தேடுதல் பணி நடைபெற்றது. இந்த வெடிவிபத்து குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

வெயிலின் தாக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது பட்டாசுகளைக் கையாளுவதில் கவனக்குறைவு ஏற்பட்டதா என்ற கோணத்தில் கல்லாவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பட்டாசு கிடங்கு முறையான அனுமதி பெற்று செயல்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!