undefined

  காடுவெட்டி குரு மகள் புதிய கட்சி தொடக்கம்... பாமகவில் பிளவு!

 
 

பாமகவின் முக்கிய தலைவராக வலம் வந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில், ‘ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரையும், கட்சிக் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே பாமக ராமதாஸ், அன்புமணி என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அணியாக இந்த புதிய கட்சி உருவானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த காடுவெட்டி குரு, பாமகவின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர். மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும், 2001ல் ஆண்டிமடம், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் எம்எல்ஏவாகவும் பணியாற்றினார். 2018ல் அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகள் விருதாம்பிகை பாமக தலைமையை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

புதிய கட்சி குறித்து பேசிய விருதாம்பிகை, சமூகநீதியே தங்களது அடிப்படை கொள்கை என கூறினார். வன்னியர் சமுதாய நலனுக்காக தனது தந்தை கடைசி வரை உண்மையாக இருந்ததாகவும், பாமக தற்போது தந்தை–மகன் கட்சியாக மாறிவிட்டதாகவும் விமர்சனம் செய்தார். அனைத்து கட்சிகளும் வன்னியர்களை புறக்கணிப்பதாக கூறிய அவர், இந்த நிலைக்கு எதிராகவே புதிய கட்சி தொடங்கியதாக தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!