undefined

கலைஞர் கனவு இல்லம் - மேலும் 1,00,000 வீடுகள் கட்ட அனுமதி - அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில் "கலைஞர் கனவு இல்லம்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் கூடுதல் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள 8 லட்சம் குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் இலக்கு. தற்போது ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 3.50 லட்சம் ரூபாய் நிதியுதவி (மானியம்) வழங்கப்படுகிறது. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும் அடங்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 1 லட்சம் வீடுகளையும் சேர்த்து, மொத்தமாகப் பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் குடிசைகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், சொந்தமாகப் பட்டா அல்லது நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்த வீடுகள் சமையலறை, கழிப்பறை மற்றும் மின்சார வசதிகளுடன் தரமான முறையில் கட்டப்படுகின்றன. வீட்டின் வசதிகளைக் கூடுதலாக விரிவுபடுத்த விரும்புவோருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வீடுகள் கட்டுவதுடன், ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்த 2,200 கி.மீ தூரத்திற்குச் சாலைகளைச் சீரமைக்க 1,088 கோடி ரூபாயையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!