அறிக்கையில் பூடகம்.... தவெக-வில் இணையும் காளியம்மாள்?
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த பிறகும், தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனங்களை சீமான் முன்வைக்க தொடங்கிய பிறகும் இந்த விலகல்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.
இந்த விலகல் பட்டியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அடிபட்ட பெயர்களில் நாம் தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள். சீமான், காளியம்மாளை ஒரு தொலைபேசி உரையாடலில் திட்டியதாக செய்திகள் வெளியாகின. விஜயின் தவெக-வில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் இணைய உள்ளதாக செய்திகள் வந்த போது அதில் காளியம்மாள் பெயரும் அடிபட்டது.
இதில் இறுதியில் அவர் கூறிய வாசகம் தான் சற்று உற்றுநோக்க வைத்துள்ளது. ” என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழ் தேசியமும், திராவிடமும் தான் தனது இரு கண்கள் என தனது கொள்கைகளை விளக்கியவர் தவெக தலைவர் விஜய். இப்படியான சூழலில், தமிழ் தேசியத்தை விதைக்கும் கட்சியில் எனது பயணம் என காளியம்மாள் கூறியிருப்பது. முன்பு உலாவிய வதந்திகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்த தகவல் வெறும் யூகமே. அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் காளியம்மாள் கூறிய தமிழ்த்தேசிய அரசியல் பயணம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!