undefined

காஞ்சி ஏகாம்பரநாதர் மகா கும்பாபிஷேகம் தொடங்கியது...17 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் பெருவிழா | பள்ளிகளுக்கு விடுமுறை!

 

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் 'பிருத்வி' (நிலம்) தலமாகப் போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று டிசம்பர் 8ம் தேதி காலை 5 மணிக்கு துவங்கியது. 

கும்பாபிஷேக விழாவானது, கடந்த டிசம்பர் 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று மாலை கணபதி பூஜை மீண்டும் தொடங்கி, தொடர்ந்து 9 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் சிறப்புப் பூஜைகளுக்குப் பின் ஊர்வலமாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தடைந்தது.

ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவிற்காக, சுமார் ரூ. 26 கோடி முதல் ரூ. 28 கோடி செலவில் கோயிலில் புனரமைப்புப் பணிகள் அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை நிதி ஒதுக்கியதுடன், உபயதாரர்கள் மூலமும் மீதமுள்ள நிதி வசூலிக்கப்பட்டுத் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கும்பாபிஷேகத்தையொட்டி புதிய தங்கத் தேர் செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது. 23 அடி உயரம் கொண்ட இந்தத் தங்கத் தேருக்காக 23 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏகாம்பரநாதர் சுயம்பு மூர்த்தியாக மணல் லிங்கமாகவே (பிருத்வி லிங்கம்) காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சமான மாமரம் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இதில் இருந்து இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என 4 விதமான சுவைகளைக் கொண்ட மாம்பழங்கள் விளைவது இதன் தனிச் சிறப்பாகும். ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோவிலைச் சுற்றியுள்ள 149 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!