வெள்ளப் பாதிப்பு ஆய்வின் போது குழந்தைக்கு 'மலர்' எனப் பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.!
வடகிழக்குப் பருவமழையால் தூத்துக்குடியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக வெள்ள நீர் தேங்கியுள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கனிமொழி எம்.பி. அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுடலையாபுரம், மாதாநகர், ராஜபாளையம், தாளமுத்துநகர், பூபாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி ஆகிய பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களைப் பார்வையிட்டார்.
அங்குள்ள பொதுமக்களின் சிரமங்கள் மற்றும் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். மேலும், மோட்டார் பம்புகள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் குறித்தும், மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் குறித்தும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கு இடையே, ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் அரங்கேறியது. தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் வெள்ள நிலையை ஆய்வு செய்யச் சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒரு குழந்தையின் பெற்றோர், தங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு கனிமொழி எம்.பி. அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. அவர்கள், அந்தக் குழந்தைக்கு அன்போடு 'மலர்' என்று பெயர் சூட்டினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்படப் பலர் உடனிருந்தனர். மக்களின் சிரமங்களைக் களைய அரசுத் தரப்பிலும், கட்சித் தரப்பிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!