திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை) வருடாந்திர கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. இன்று மாலை ஏழுமலையானுக்கு அனைத்துக் கைங்கர்யங்களும் நிறைவடைந்த பிறகு, தீபத்திருவிழா தொடங்குகிறது. இன்று மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு, சத்ர சாமர, மங்கள வாத்தியங்களுடன் விமானப் பிரதட்சணம் செய்யப்படும். அதன் பிறகு ஆனந்த நிலையத்தில் மூலவர் ஏழுமலையானுக்கு நெய் தீப ஆரத்தி காண்பிக்கப்படும். கருவறை, அகண்டம், குலசேகரப் படி, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வகுளமாதா, கல்யாண மண்டபம், தங்கக்கொடிமரம், பலிபீடம் மற்றும் ஸ்ரீவாரி புஷ்கரணி உட்பட கோவிலின் பல இடங்களில் வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு வழக்கமாக நடைபெறும் கருடசேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவற்றைத் திருப்பதி தேவஸ்தானம் இன்று ரத்து செய்துள்ளது.
கோவிந்தராஜசாமி கோவிலிலும் இன்று கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. மாலை நேரத்தில் புண்டரீகவள்ளி தாயார் கோவிலில் இருந்து கார்த்திகை தீபம், பட்டு வஸ்திரங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவிந்தராஜசாமிக்குச் சமர்ப்பிக்கப்படும்.
கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள புண்டரீகவள்ளி தாயார் சன்னதியில் இருந்து கொண்டு வரப்படும் கார்த்திகை தீபம், பட்டு வஸ்திரங்கள் மூலம் இன்று மாலை கோதண்டராமசாமி கோவிலிலும் தீபத்திருவிழா நடைபெறவுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!