undefined

கார்த்திகை தீபத் திருநாள்... திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு!

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று (டிசம்பர் 1) முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார் மனுவில், டிசம்பர் 3ஆம் தேதி வரவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, மலையின் உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் இல்லாமல், பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தர்காவுக்கு அருகில் இருந்தாலும், 15 மீட்டர் தொலைவில் உள்ள பழமையான தீபத்தூணில் தீபம் ஏற்ற சட்ட ரீதியாகத் தடை இல்லை என்றும், அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டதோடு மட்டுமல்லாமல், திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வும் நடத்தியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று அவர் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தர்ஹாவுக்கு அருகில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த நிகழ்வுக்குக் காவல்துறை முழுப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தர்ஹா தரப்பு, அரசு தரப்பு, அறநிலையத்துறை தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு எனப் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கோரப்பட்டது. எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முடிவு எடுப்பது கோயில் நிர்வாகம்தான் என்றும், அதற்கான அதிகாரம் நீதிமன்றம் வழங்கியது என்றும் அரசு தரப்பில் ஏற்கெனவே கூறப்பட்டது. இருப்பினும், அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே நீதிபதி இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!